Thursday, January 31, 2008

பிரிவோம் சந்திப்போம் - திரை விமர்சனம்

செட்டிநாடு என்று சொல்லப்படக்கூடிய - காரைக்குடிப் பகுதியைச் சேர்ந்த நகரத்தார் - நாட்டுக்கோட்டை செட்டியார் - சாத்தியக் குடும்பத்தின் கதை...

சமகால தமிழ் சினிமாவில் பெரும்பாலான இயக்குநர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் தனது சாதி சார்ந்த மக்களை கதை மாந்தர்களாகவும், தனது ஊர்ப்பகுதியைக் கதைக்களமாகவும் கொண்டு படம் பிடிக்கின்றனர் (பாரதி ராஜா, தங்கர் பச்சான், சேரன், ஹரி) இப்படத்தில் கரு.பழனியப்பன் செய்ததும் இதுதான்.
ஒருவேளை அவர் தனது ஸாதிமக்களது நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், போலித்தனங்கள், ஆதிக்கப்போக்க்குகள், சுரண்டல் போன்றவற்றை விமர்சித்து காட்சிப்படுத்தியிருந்தால், சுய சாதி அபிமானத்தை மீறியதற்காக வியக்கலாம். அதுவன்றி தனது சாதி பாரம்பரியத்தின் மீதும், பழக்கவழக்கங்கள் மீதும் மதிப்பும், பெருமிதமும் கொண்டு அதையே ஞாயப்படுத்தி காட்சியாக நம்முன் வைக்கும்போது திரையரங்கில் சலசலப்பும்,
"உன் வீட்டுக் கல்யாண சி.டி-யை நாங்க ஏன் காசு கொடுத்துப்பார்க்க வேண்டும்?"
என்ற கேள்வியும் ஒலிக்கிறது...

காலம் நகரத்தார் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாறுதல்களை எல்லாம் துடைத்துப்போட்டுவிட்டு
மீண்டும் தம் பழைய பொற்கால வாழ்வுக்கு திரும்ப ஏ ங்கும் மனவெளிப்பாடுதான்
"பிரிவோம் சந்திப்போம்"
இறுதியாக, ஏற்றத்தாழ்வான சாதிய படிநிலை சமூகத்தில் தனக்கு கீழே சாதிகளை வைத்து வொடுக்கியும்
சுரண்டி யும் வரும் எந்த ஒரு சாதியும் தன் நிலை குறித்து குற்ற உணர்வு கொள்ள வேண்டுமே தவிர
பெருமிதம் கொள்ள எந்தவித ஞாயமும் கிடையாது...